கல்லூரி மாணவி மர்ம மரணம்; சவப்பெட்டியில் இழுத்து சென்ற போலீஸ்! அதிர்ச்சி வீடியோ
தெலுங்கானாவில் திங்கள்கிழமை சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த 16 வயது கல்லூரி மாணவியின் உடலை சவப்பெட்டியில் வைத்து இழுத்து சென்றனர், இதை பார்த்த தந்தை அதை தடுக்க முயற்சித்த போது போலீசார் ஒருவர் அவரை அடித்து இழுத்து தள்ளிய வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணின் சடலம் கல்லூரியின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தின் புகாரின் அடிப்படையில் தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக குற்றவியல் அலட்சியம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சங்க ரெட்டியின் பொறுப்பில் இருக்கும் மேடக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அந்த போலீஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.