திமுக பொதுச்செயலர் பதவி துரைமுருகனுக்கு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற 29 ம் தேதி திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக., பொதுச்செயலராக இருந்த அன்பழகன் மறைவை அடுத்து, அப்பதவிக்கு பொருளாளராக உள்ள துரைமுருகன் போட்டியிட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகவும், பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரது விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறேன். இதனால் மார்ச் 29ல் நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச்செயலர் மற்றும் பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
பொருளாாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, ஏ.வ.வேலு, பொன்முடிய ஆகிய 3 பேரில் யாராவது ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.