ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை – Live Update

Local body election 2019

7:15 AM திண்டுக்கல் மாவட்ட கவுன்சிலர்: 14 இடங்களில் திமுக, 9 இடங்களில் அதிமுக வெற்றி

7:10 AM கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம்:

ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி விபரங்கள்.
வார்டு 1: இந்திராணி திமுக 1272
வார்டு 2: சங்கர் அதிமுக 1476
வார்டு 3: முருகானந்தம் திமுக 1432
வார்டு 4: பாலமுருகன் சுயேட்சை தென்னந்தோப்பு 865
வார்டு-5 ரேவதி 1797 திமுக
வார்டு-6 அமுதா அதிமுக 1519
வார்டு-7 முத்துலட்சுமி திமுக ( முன்னாள் ஒன்றிய சேர்மன் மாமல்லன் மனைவி) 2887
வார்டு-8 வெற்றிச்செல்வி அதிமுக 1770
வார்டு-9 திருபுரசுந்தரி அதிமுக 2105
வார்டு-10 சுபஸ்ரீ பாமக 1261
வார்டு-11 ரஜினிகாந்த் திமுக 1405
வார்டு-12 சிவலோகநாதன் தேமுதிக 1794
வார்டு-13 பூங்குழலி அதிமுக ( பாண்டியன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரின் மனைவி) 2393
வார்டு-14 ஹேமலதா அதிமுக 2292
வார்டு-15 சுஜாதா திமுக 1801
வார்டு-16 வசந்தி அதிமுக 2665
வார்டு-17 புவனேஸ்வரி தேமுதிக 817
வார்டு-18 சேது மாதவன் சுயேட்சை கைபேசி 1144
வார்டு-19 பன்னீர்செல்வம் பாமக 1392

11:32 PM தேர்தல் ஆணையத்திற்கு கிளம்பினார் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையரை சந்தித்து மீண்டும் முறையிடுகிறார் ஸ்டாலின் ஏற்கனவே ஒருமுறை வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு இருப்பதாக புகார் அளித்தார்

11:24 PM திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு குடிநீர், உணவு வழங்கவில்லை என புகார்
– தேர்தல் ஊழியர்கள் சிறிது நேரம் வெளிநடப்பு செய்த‌தால் பரபரப்பு
– அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று வாக்கு எண்ணும் பணிக்கு திரும்பினர்.

11:00 PM வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறது என்று நாளை எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெற்றி அறிவிப்பில் தாமதம் எனக்கூறி திமுக தாக்கல் செய்த மனு மீது நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு உத்தரவு

7:28 PM அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்து 3 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயது எம் ஏ முதுகலை முதலாமாண்டு படிக்கும் இளம்பெண் பிரீத்தி மோகன் 2203 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

9:30 PM தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி, முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி பெற்றதன் மூலம் தேர்தல் வெற்றியை நாம் தமிழர் கட்சி எட்டியுள்ளது.

9:00 PM நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு- தேர்தல் ஆணையர் பழனிச்சாமி. எந்த இடத்திலும் வேண்டுமென்றே வாக்கு எண்ணிக்கை தாமதமாகவில்லை. சென்னையில் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி பேட்டி.

ஊராட்சி மன்ற தலைவர் பதவியை கைப்பற்றிய 80 வயது மூதாட்டி…!

4:35 PM புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றியத்தில் 19-வது ஒன்றிய வார்டு கவுன்சிலர் போட்டியில் தி.மு.க வேட்பாளர் வெற்றி.

4:20 PM ஊராட்சி மன்றத் தலைவரானார் 79 வயது மூதாட்டி வீரம்மாள்

4:15 PM மணப்பாறை குறிஞ்சி பொறியியல் கல்லூரி முன்பு திமுகவினர் சாலைமறியல் போராட்டம்

திமுக வெற்றியை தடுக்க சதி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

3:30 PM திருச்சி – வையம்பட்டி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அறிவிக்கப்படாததை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியல்.

2:35 PM தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜாராமன் வெற்றி பெற்றார்.

2: 55 PM மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 192/515, திமுக 97 அதிமுக 94 அமமுக 1 இடத்தில் முன்னிலை

2:50 PM விளாத்திக்குளத்தில் 3 வாக்குப் பெட்டிகளை காணவில்லை- ஸ்டாலின்

2:40 PM: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் 19-வது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் வெள்ளையம்மாள் வெற்றி.

2:35 PM வாக்குகள் எண்ணப்படுவதை வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

2:30 PM சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் குறித்து புகார். புகார் கொடுத்த பின்னர் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின்.

2:15 PM திருச்சி – மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4-வது வார்டு – ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் ​திமுக வேட்பாளர் ஸ்ரீதர் 2511 ஓட்டுகள் பெற்றுவெற்றி பெற்றார்.  ​அதிமுக வேட்பாளரான எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி அடைந்தார்.

2:12 PM வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு – தேர்தல் ஆணையத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று முறையீடு!

1:45 PM திமுக வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் என்று ஸ்டாலின் புகார் – மாநில தேர்தல் ஆணையரிடம் திமுக தரப்பில் முறையீடு

1:07 PM அரியலூர் : செந்துறை ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் கீதா வெற்றி
சேலம் : தலைவாசல் ஊராட்சி ஒன்றிய 2-வது வார்டில் பாமக வேட்பாளர் வெற்றி

1:01 PM தஞ்சை ஒன்றிய 2-வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி

12:58 PM நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2வது வார்டு ஒன்றியக் குழுவில் திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

12:56 PM தி.மு.க கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
மாவட்ட கவுன்சிலர் தேர்தல் : தி.மு.க+ – 90 அ.தி.மு.க+ – 62
ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் : தி.மு.க+ – 156 அ.தி.மு.க+ – 84

12:54 PM சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய குழு 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் ப்ரெனிலா கார்மல் வெற்றி.

12:51 PM மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம்

ஒன்றிய கவுன்சிலர்

  • மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வள்ளிமயில் வெற்றி
  • மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக நித்யா வெற்றி
  • உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக தனலட்சுமி வெற்றி

12:50 PM ராமநாதபுரம் – திருவாடானை ஊராட்சி 3வது வார்டு (சிறுகம்பையூர், பாகனூர், பதனக்குடி) ஒன்றிய கவுன்சிலர் அதிமுக வேட்பாளர் மா.சிவா வெற்றி.

12:48 PM தொல். திருமாவளவன் தம்பி மனைவி வெற்றி – அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள திருமாவளவன் சொந்த ஊரான சன்னாசிநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட செல்வி செங்குட்டுவன் வெற்றி.

12:31 PM மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் துவரிமான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாலாவது வார்டு வேட்பாளர் ஒருவர் , டைபாய்டு காய்ச்சலால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக அங்கீகாரம் பெற்ற யாராவது வாருங்கள் என போலீசார் கோரிக்கை

12:28 PM தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் 1வது வார்டு ஒன்றியம் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக சம்பத் வெற்றி.

12:27 PM வாக்குப்பெட்டியின் சாவியை காணோம்! விருதுநகரில் நிகழ்ந்த விசித்திரம்

12: 25 PM திருச்சி – மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான நிலவரம் :
ஓமந்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட லலிதா 469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சிறுகுடி பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட சந்திரசேகர் 357 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

12:15 PM ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் 2ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் ஷோபா வெற்றி

12:10 PM சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றிய 1ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் பஞ்சவர்ணம் வெற்றி

12:05 PM ராமநாதபுரம் – அதிமுக வெற்றி , ஒட்டப்பிடாரம் – அதிமுக வெற்றி, திருச்செந்தூர் -அதிமுக வெற்றி

11:50 AM தேனி : சின்னமனூர் ஒன்றிய முதல் வார்டில் திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி

11:46 AM ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளத்தூர் ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹேமலதா வெற்றி

11:45 AM தஞ்சாவூர் பூதலூர் ஒன்றியம் 2-வது வார்டில் அமமுக வேட்பாளர் சவீதா ரமேஷ் வெற்றி

11:40 AM ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 39/5067, திமுக 20, அதிமுக 19 இடங்களில் முன்னிலை

11:38 AM திருச்சி துறையூர் மாவட்ட கவுன்சிலர் – திமுக 2 – அதிமுக 0 , ஒன்றிய கவுன்சிலர் – திமுக 6 – அதிமுக 2

11:35 AM மின்னணு இயந்திரம் மூலம் நடந்த கன்னியாகுமரி மேல்புறம் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி; சிபிஎம் வேட்பாளர் இரண்டாம் இடம்; பாஜக வேட்பாளர் மூன்றாமிடம்

11:31 AM ஈரோடு மாவட்ட கவுன்சிலர் – திமுக 5 இடங்களிலும் அதிமுக 1 இடங்களிலும் முன்னிலை

11:28 AM ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 25/5067, திமுக 15, அதிமுக 6 இடங்களில் முன்னிலை

11:21 AM தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கேமரா இயங்கவில்லை என புகார் – வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி பூத் ஏஜென்டுகள் வாக்குவாதம்

11:19 AM கடும் இழுபறி..! திமுக,அதிமுக மாறிமாறி முன்னிலை..!

11:18 AM தஞ்சை – அம்மாபேட்டை ஒன்றியம் 5-வது வார்டில் அமமுக முன்னிலை

11:15 AM திருச்சி மாவட்டம் ,முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு.

11:11 AM திருவள்ளூர்- சோழவரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீசார் தடியடி

11 :10 AM கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் வாக்குப்பெட்டி துருபிடித்ததால், திறக்க முடியாமல் வெட்டும் இயந்திரம் மூலம் வாக்குப்பெட்டி உடைப்பு

11:06 AM சேலம் மாவட்டம் வீரபாண்டியில் 7 இடங்களில் திமுக முன்னிலை

11:00 AM நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் 1ஆவது வார்டில் திமுக வேட்பாளர் மனோகரன் வெற்றி!

10:58 AM ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் 4-வது வார்டில் திமுக வேட்பாளர் முன்னிலை

10:55 AM புதுக்கோட்டையில் இட்லிக்கு சாம்பார் வராததால் வாக்கு எண்ண ஊழியர்கள் மறுப்பு

10:50 AM தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தபால் வாக்குகள் செல்லாவதையாக அறிவிப்பு

10:42 AM உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தி.மு.க கூட்டணி முன்னிலை!

10:41 AM கரூர் ஓட்டு எண்ணும் மையத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளே வந்ததற்கு திமுகவினர் எதிர்ப்பு

10:40 AM சிதம்பரம் அருகே உள்ள சி.சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

10:35 AM தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியில் ஒன்றில் அதிமுக முன்னிலை மற்றொன்றில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக முன்னிலை

10:30 AM நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் 9-வது வார்டில் பாஜக முன்னிலை

10:22 AM மதுரை 16-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி – அதிமுக வேட்பாளர் ஐயப்பன் முன்னிலை

10:00 AM மேல்புறம் மாவட்ட ஊராட்சி மூன்றாவது வார்டில் லீமாரோஸ் முன்னிலை

9: 45 AM திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் காலை உணவு வழங்காததால் ஓட்டு எண்ணும் பணி தாமதம்

9:30AM ஈரோடு – வாக்கு எண்ணும் அலுவலர் மயக்கம் வாக்கு எண்ணிக்கையின்போது மயங்கி விழுந்த அலுவலர் சரவணனுக்கு சிகிச்சை

8:49 AM ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சில இடங்களில் வாக்கு எண்ணும் பணி தாமதம்

8:45 AM திருவண்ணாமலையில் சீல் வைக்கப்பட்ட #வாக்குப்பெட்டி வெளியில் எடுத்துவரப்பட்டதால் பரபரப்பு

8:47 AM தர்மபுரி மாவட்டம் அரூரில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு (2016) முன் நடத்த வேண்டிய தேர்தல், 2019யில் நடந்து இருக்கிறது, இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் இந்த பணி தொடங்கியது.

இந்த தேர்தலில் 2.30 லட்சம் வாக்காளர்கள் போட்டியிட்டனர். இதில் யார் யார் வெற்றி பெற்றனர் என்பது குறித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



Comments are closed.

https://newstamil.in/