நடிகர் பிரசாந்த் உடல் எடையை குறைத்து எப்படி இருக்கார்னு பாருங்க!
ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த பிரசாந்த்துக்கு பெண் ரசிகைகள் அதிகம், கடைசியாக இவர் நடித்த வெற்றி படம் என்றால் அது வின்னர் தான்.
கதைகள் சரியாக இல்லாமல், உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது அளவுக்கு பிரசாந்த் மாறினார். பின்னர் படிப்படியாக வாய்ப்புகள் குறைய அடுத்து ரீஎன்ட்ரி கொடுத்தாலும் சொல்லிக் கொள்ளும் படியாக வெற்றிகிட்டவில்லை.
இந்நிலையில் நடிகர் பிரசாந்த் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா இயக்க உள்ளார்.
இந்நிலையில் எடையை குறைத்து படு ஸ்டைலிஷாக மாறியிருக்கிறார் பிரசாந்த். இவரின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
Comments are closed.