சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார்.

முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும் படம் இது. ஆகையால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கையில் பாம்புடன் முழுக்க உடல் எடையைக் குறைத்திருக்கும் சிம்புவின் லுக் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுசீந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘ஈஸ்வரன்‘ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா, மனோஜ், நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.


1 thought on “சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  • August 15, 2022 at 7:40 am
    Permalink

    I’m writing on this topic these days, baccaratsite, but I have stopped writing because there is no reference material. Then I accidentally found your article. I can refer to a variety of materials, so I think the work I was preparing will work! Thank you for your efforts.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *