நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு உறுதி
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, ஆகாஷ் குமார் சிங், பவன் குப்தா ஆகிய நான்கு பேரை, ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடும்படி, டெல்லி நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டது.
குற்றவாளிகளில் ஒருவனா முகேஷ் சிங், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணை மனு தாக்கல் செய்திருந்தார்.
குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு படி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.