மதுபோதையால் சாக்கடையில் விழுந்து விபரீதம்!
அந்தியூர் அருகே உள்ள ஆதிரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. ஓட்டுநரான இவர் இரவு மதுபோதையில் அந்தியூர் – பர்கூர் சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
திருநாவுக்கரசு அதிக போதையில் இருந்ததால் ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் சிரமப்பட்டவர் அங்கிருந்த மதகில் சாய்ந்துள்ளார்.
கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் இழந்தவர் அருகே ஓடிக் கொண்டிருந்த சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
அவர் சாக்கடையில் பிணமாகக் கிடந்ததை இரண்டு நாட்களுக்கு பிறகே பார்த்த அருகே இருந்த மக்கள் இது குறித்து அந்தியூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் திருநாவுக்கரசு சடலத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.