மறந்துடாதீங்க நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

நாளை தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மலத் துகள்களினால் மாசடைந்த நீர், உணவு போன்றவற்றை உட்கொள்ளப்படும் போது இளம்பிள்ளை வாதம் தொற்றுகிறது. இதனை போலியோ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றோம்.

நாடு முழுவதும் இளம்பிள்ளைவாத நோயை தடுப்பதற்காக 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போலியோ இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

இந்நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் 90% பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் போலியோவை தடுக்கும் நோக்கில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சொட்டு மருந்து நாளை தரப்படுகிறது. தமிழகத்தில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம், 5 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்தப் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7.00 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.



Comments are closed.

https://newstamil.in/