குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு? – விசாரணை தொடக்கம்
குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் விசாரணை தொடங்கியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த 2019 செப்., 1ல் நடந்தது. தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்த இந்த தேர்வை 16 லட்சத்து 865 பேர் எழுதினர். சில நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் 2017-18 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி என சந்தேகம் எழுந்துள்ளது. ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 50 பேர், மாநில அளவில் 50 இடங்களுக்குள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதிலும், இந்த மையங்களில் தேர்வெழுதிய 19 பேர் முதலிடமும் பெற்றுள்ளனர். இதனால், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், 2017-18 ம் ஆண்டில் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 30க்கும் மேற்பட்டோர் 50 இடங்களுக்குள் வந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாகவும், தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்து வருகிறோம் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
Comments are closed.