பதற வைக்கும் வீடியோ: 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது; 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்
புதுச்சேரி அடுத்த சின்னபாபுசமுத்திரம் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து சம்பவம். புதுச்சேரி – விழுப்புரம் மாவட்டம் எல்லையில் உள்ள பகுதி சின்னபாபு சமுத்திரத்தில் சரோஜா என்பவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதற்காக 10 அடி ஆழமும், 1 அடி அகலத்துக்கு போர்வெல் மெஷின் மூலம் குழி போடப்பட்டுள்ளது. பின்பு போர்வெல் பணி நின்றுவிடவும் குறித்த குழியினை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
இந்நிலையில் குழியின் அருகே பாஸ்கர் என்பவரின் 3 வயது மகள் கோபிணி விளையாடிக்கொண்டிருக்கையில், அதில் தவறி விழுந்துள்ளார். குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்கவும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். பின்பு குழிக்குள் இருந்து சத்தம் வருவதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர்கள் விரைந்து வருவதற்குள் நேரத்தினைக் கடத்தாமல், அப்பகுதி இளைஞர்கள் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். குழந்தை விழுந்த குழிக்கு அருகில் பொக்லைனை வைத்து குழி தோண்டி 15 நிமிடத்திற்குள் காப்பாற்றியுள்ளனர். குறித்த இளைஞர்களின் செயலுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
We absolutely love your blog and find almost all of your post’s to be just what I’m looking for. can you offer guest writers to write content available for you? I wouldn’t mind producing a post or elaborating on some of the subjects you write concerning here. Again, awesome website!
I do trust all the ideas you have offered to your post. They’re really convincing and will certainly work. Still, the posts are very short for novices. May you please extend them a little from next time? Thank you for the post.