இலவசமாக கிடைக்கும் போதை பொருட்கள்; தள்ளாடும் சிறுவன்- வைரல் வீடியோவால் பரபரப்பு

வடக்கு கோவாவில் இரண்டு இளைஞர்கள் இலவசமாக போதை மருந்துகள் வழங்கப்பட்டதாக வீடியோவில் கூறிய 17 வயது சிறுவனை கோவா போலீசார் தேடி வருகின்றனர்.

17 வயதுடைய சிறுவன் ஒருவன் போதையில் பேசும் அந்த வீடியோவில், ‘தனக்கு 2 இளைஞர்கள் போதைப் பொருட்களை இலவசமாக தந்தனர்’ என்று அந்த சிறுவன் போதையில் கூறினான். சுமார் 5 நிமிடங்கள் அந்த வீடியோ காட்சி இருக்கிறது.

இதுதொடர்பாக போலீசார் அந்த சிறுவனை வலைவீசி தேடிவருகிறார்கள். கராப்பூர் கிராமம், முதல்-மந்திரி பிரமோத் சாவந்தின் தொகுதியான சன்குலிமில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது.

மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் போதைப்பொருட்கள் எளிதில் கிடைக்கிறது என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். தற்போது அது நிரூபணமாகும் வகையில் அந்த வீடியோ காட்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.


1,442 thoughts on “இலவசமாக கிடைக்கும் போதை பொருட்கள்; தள்ளாடும் சிறுவன்- வைரல் வீடியோவால் பரபரப்பு