ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு நாயகனா? ஓ.பி.எஸ். மாடுபிடி வீரரா? – சட்டப்பேரவையில் சிரிப்பொலி

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓ.பி.எஸ். பெயரை குறிப்பிடும் போது ஜல்லிக்கட்டு நாயகர் என்றார்.

அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார்? இதற்கு முன் எப்போதாவது காளைகளை அடக்கி இருக்கிறீர்களா? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்க பன்னீர்செல்வத்தை அனுப்பினால் எம்எல்ஏ.,க்கள் பார்க்க ஆவலாக இருக்கிறோம், என்றார். இதனைக் கேட்டு அவையில் சிரிப்பொலி எழுந்தது.

பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக நாடே போராட்டம் நடத்திய போது சிறப்பு அனுமதி வழங்கி போட்டி நடத்தியதால் ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு நாயகன் என அன்போடு அழைக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.

மேலும் அடுத்த ஆண்டு விராலிமலையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வருமாறு துரைமுருகனுக்கு அழைப்பு விடுத்த அவர், பார்வையாளராகவோ அல்லது மாடுபிடி வீரராகவோ வரலாம் என்றும் கூறினார். இந்த விவாதம் நடந்த போது ஓ.பன்னீர்செல்வம் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது



Comments are closed.

https://newstamil.in/