பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சிங்கங்கள் – வீடியோ

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரிலிருந்து போபாலில் உள்ள மத்திய பிரதேசத்தின் வான் விஹார் தேசிய பூங்காவிற்க ஒரு ஜோடி சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன பிலாஸ்பூரின் கனன் பெண்டாரி விலங்கியல் பகுதியிலிருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிங்கம் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

இதை பற்றி விஹார் தேசிய பூங்கா இயக்குனர் கூறும்போது “இரண்டு சிங்கங்களும் நான்கு வயதுடையவை, அவை பிலாஸ்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

அவற்றை இங்கு கொண்டு வருவதற்கு முன்பு நாங்கள் சரியான சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டோம், விலங்குகள் ஆரோக்கியமாக உள்ளன” .

மேலும் இப்போது, தேசிய பூங்காவில் ஆறு சிங்கங்கள் உள்ளன, அதில் நான்கு ஆண் சிங்கங்களும் இரண்டு பெண்களும் அடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார். போபாலில் சிங்கங்களின் உடல்நிலை மேலும் மேம்படும் என்று விஹார் தேசிய பூங்கா இயக்குனர் கூறினார்.



Comments are closed.

https://newstamil.in/