கேத்ரின் தெரசா சம்பளம் 1 கோடி – எந்த படத்துக்கு தெரியுமா?

தென்னிந்தியாவில் திறமைக்கு ஏற்ற மாதிரி நடிகைகளுக்கு சம்பளம் கிடைப்பது இல்லை. தென்னிந்திய மொழி படங்களில் நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா ஆகிய 3 பேர் மட்டுமே சம்பளம் இவ்வளவு தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்து கேட்டு வாங்குகிறார்கள். அவர்கள் கேட்டதை கொடுத்தால்தான் நடிப்போம் என்று கறாராக சொல்லும் நிலை இருக்கிறது.

இந்நிலையில் நடிகைகளில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர். மெட்ராஸ் படத்தில் கார்த்தியுடன் நடித்தவர் கேத்ரின் தெரசா. கலகலப்பு 2, கடம்பன், கதாநாயகன், நீயா 2 போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரை 1 கோடி சம்பளத்தை எட்டாமலிருந்தார். திடீரென்று அவருக்கு சக நடிகைகளால் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

டோலிவுட் ஹீரோ என்.டி.பாலகிருஷ்ணா, பயோபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க சோனாக்‌ஷி சின்ஹாவிடம் கால்ஷீட் கேட்டு வந்தனர். இதையடுத்து அவர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், என்.டி.பாலகிருஷ்ணா படத்தில் நான் நடிக்கவில்லை என்று சோனாக்‌ஷி சின்ஹா அறிவித்தார்.

இதையடுத்து வேறு நடிகைகளை நடிக்க வைக்க இயக்குனர் தரப்பு முயற்சி மேற்கொண்டது. ஒரு சில நடிகைகள் பால கிருஷ்ணா கோபக்காரர், அவருடன் நடிக்க பயமாக இருக்கிறது என்று சொல்லி நடிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
விஜயதேவரகொண்டா நடிக்கும் வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து வருகிறார் கேத்ரின்.


Leave a Reply

Your email address will not be published.