சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் பலி 1,113 பேர்

சீனாவின் ஹுபேய் மாகாணம் ஊஹான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 42,364 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 1,113 பேர் பலியாகியுள்ளார்.

சீனாவில் ‘கொரோனா’ எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், ஜப்பானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சொகுசுக் கப்பலில் இருந்து தரையிறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தக் கப்பலில் உள்ள 3, 700 பேரில், 135 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில், மேலும் 39 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கப்பலில் இந்தியர்கள் 168 பேர் உள்ள நிலையில், அதில் 6 தமிழர்களும் கப்பலில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இன்னும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/