பலூன் போல் பெரிதாகும்; மனிதர்களை கொல்லும் பஃபர் மீன்கள்! – வீடியோ

பஃபர் மீன்களில் 30 மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு நச்சுகள் உள்ளன மற்றும் இதற்கு எந்த மருந்தும் இல்லை. ‘பலூன் மீன்’ என்றும் சிலர் அழைக்கிறார்கள். இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த உருளை வடிவமாகவும் இருக்கும்.

ஆபத்தை எதிர்கொள்ளும்போது அதன் உடலை விரிவுபடுத்துவதற்கான குறிப்பிடத்தக்க திறன், இது உடலை உள்ளடக்கிய நச்சு கூர்முனைகளைத் தவிர்க்கிறது. ஜப்பான் கடல் பகுதில் காணப்படும் இவ்வகை மீன்கள் நச்சுத் தன்மை கொண்டதாக உள்ளன.

எதிரிகள் தாக்க வரும்போது தம் உணவுக் குழலைக் காற்றால் நிரப்பிக்கொள்ளும். அதாவது தனக்குத்தானே ஊதித் தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளும்.

உலகளவில் இவை 120 மட்டும் உள்ளன, பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பிராந்தியத்தில் இவை இருக்கின்றன. இவை கடுமையான விஷத்தன்மை கொண்டவை. பஃபர் மீன்களின் உடலிலிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்துதான் இந்த விஷம் உருவாகிறது. செதில்களற்ற உடலின் மேல் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும் முட்களில்தான் விஷம் தேங்கி நிற்கும்.

உடல் முழுவதும் விஷத்தை வைத்திருக்கும் இந்த மீன்கள், ஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளது. இந்த மீனின் நச்சு முட்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு மசாலை போட்டுப் பொரித்து சாப்பிட்டும், சூப் வைத்தும் குடிக்கிறார்கள்.Comments are closed.

https://newstamil.in/