4 மாணவிகளை அடித்து தூக்கிய கார் – பரபரப்பு வீடியோ

கேரளாவில் ஆலப்புழாவில் குடிபோதையில் ஓட்டிவந்த கார் மோதி பயங்கர விபத்து சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் ஆலப்புழா பூச்சாகால் பகுதியைச் சேர்ந்த மனோஜ், ஆனந்த் ஆகியோர் இன்று மதியம் 2 மணி அளவில் டாடா இண்டிகோ காரில் ஆலப்புழா நோக்கிச் சென்றுள்ளனர்.

அப்போது மாணவிகள் சென்று கொண்டிருந்த சாலையின் எதிர்புறத்தில் இருந்து ஒரு கார் அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்தபடி தாறுமாறாக வந்து கொண்டிருந்தது.

இருவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், 4 பள்ளி மாணவிகள் மற்றும் சைக்கிளில் வந்த ஒரு மாணவி மீது இவர்களது கார் அடுத்தடுத்து மோதியது. இதில் மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Kerala alapuzha car accident: Overspending car rams into students ; 8 injured

மாணவிகள் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. இதில் காரை ஓட்டி வந்த இருவரும் படுகாயமடைந்தனர். கார் மோதியதில் 2 மாணவிகளுக்கு கால்கள் உடைந்ததாகக் கூறப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/