கொரோனா பாதிப்பு – தமிழகத்தில் இன்றும் உச்சத்தில்
தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை
38,716 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 27,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,372 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இன்றும் 1,407 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 27,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 127 பேருக்கும், திருவள்ளூர் 72 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

