கொரோனா அறிகுறி இருந்தால் – சென்னை வாசிகள் கவனத்திற்கு!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,591 பேர் குணம் அடைந்துள்ளனர். 13,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய நிறைய சந்தேகங்கள் இன்னும் இருந்து வருகிறது. இதனால், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்கள், தொடர்பிலிருந்தவர்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சை உதவிகளை சென்னை மாநகராட்சி அலுவலகம் மூலம் கேட்டுத் தெரிந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மக்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் மண்டலம் வாரியாக கட்டுப்பாட்டு அறை எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலம் – 044 46556301, மணலி – 044 46556302, மாதவரம் – 044 46556303, தண்டையார்பேட்டை – 044 46556304, ராயபுரம் – 044 46556305, திரு.வி.க. நகர் – 044 46556306, அம்பத்தூர் – 044 46556307, அண்ணாநகர் – 044 46556308, தேனாம்பேட்டை – 044 46556309, கோடம்பாக்கம் – 044 46556310, வளசரவாக்கம் – 044 46556311, ஆலந்தூர் – 044 46556312, அடையாறு – 044 46556313, பெருங்குடி – 044 46556314, சோழிங்கநல்லூர் – 044 46556315.

இந்த தொலைப்பேசி எண்கள் தவிர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் 044 – 46122300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேற்கண்ட இந்த தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்டால், மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின் அடிப்படையில் சந்தேகங்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், வெளியூர்களிலும் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவின.

இதுகுறித்து தலைமை செயலாளரிடம் கேட்டபோது, “அது வதந்தி மட்டுமே”, என தெரிவித்துள்ளார். இதனால், சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான திட்டம் தற்போது அரசு பரிலீசனையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.


157 thoughts on “கொரோனா அறிகுறி இருந்தால் – சென்னை வாசிகள் கவனத்திற்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/