Thursday, September 10, 2026
LatestNEWS

சுகாதாரத்துறை செயலளராக ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்; பீலாராஜேஷ் மாற்றம்!

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலளாராக இருந்த பீலா ராஜேஷ் அதிரடியாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.


Comments are closed.