கள்ளக்காதல், காதல் ஜோடிகள் படுக்கை அறையாக மாறிய வண்டலூர் பூங்கா

தாம்பரம் அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த விலங்கியல் பூங்காவில் சுமார் 1,675 வகையான உயிரினங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.

காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்படும் இந்த பூங்கா செவ்வாய்க்கிழமையில் விடுமுறை அளிக்கப்படும். கோடை விடுமுறையை ஒட்டி அனைத்து நாட்களிலும் பூங்கா திறந்திருக்கும். இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பது வழக்கம். அதேபோல் ஏராளமான காதல் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் வந்து செல்கின்றனர்.

இதுபோல் வரும் காதல் ஜோடிகள் பூங்காவில் உள்ள மறைவான இடங்கள் மற்றும் செடி புதர்களில் உட்கார்ந்து அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் சிலர் பூங்காவின் வெளிப்படையான இடத்திலேயே சில்மிஷத்தில் ஈடுபடும் செயல், பூங்காவுக்கு வரும் குடும்பத்துடன் வருபவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

பூங்காவுக்கு நுழைவு கட்டணம் குறைவு என்பதால் ஏழை, எளிய மக்கள் என ஏராளமானோர் எளிதாக வந்து செல்லும் சுற்றுலா தலமாக உள்ளது. அதை பயன்படுத்தி காதல் ஜோடிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த காதல் ஜோடிகள் காலை 10 மணிக்கு வந்து மாலை 6 மணிவரை பூங்காவிலேயே மறைவான பகுதிகளில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து பூங்கா ஊழியர் ஒருவர் கூறுகையில், “விடுமுறை அல்லாத நாட்களில் இதுபோன்ற காதல் ஜோடிகள் வந்தால் மட்டுமே பூங்காவுக்கு வருமானம். அதனால், இதை கண்டு கொள்ள வேண்டாம் என அலட்சியமாக தெரிவிக்கின்றனர்” என்றனர்.


Leave a Reply

Your email address will not be published.