ஸ்டாலினுக்கு பித்து பிடித்து விட்டது; அதிமுககாரன் கல்லெடுத்து எறிவான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவினர் யாரும் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., கையை பிடித்து வந்தவர்கள் தான் அதிமுக.,வினர் என்றும், அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூட்டத்தில் பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் மதக்கலவரத்தை தூண்டி ஆட்சியை பிடிக்கப் பார்க்கிறார்.

சிஏஏவால் இஸ்லாமியர்கள் தமிழகத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என முதலமைச்சர் சட்டப்பேரவையில் கேட்டதற்கு ஸ்டாலின் பதில் கூறாமல் வெளிநடப்பு செய்கிறார். பேச வேண்டிய இடம் சட்டப்பேரவையா? சட்டப்பேரவைக்கு வெளியேவா?

அதிமுகவினர் யாரும் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது. எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர்கள். அதிமுக., காரன், விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்து எறிவான், கைகட்டி அமைதியாக இருக்க காங்கிரஸ்காரர்களா எனவும் பேசினார்.

மேலும், ஸ்டாலினுக்கு பித்து பிடித்து விட்டது அவர் என்ன செய்றாருன்னு அவருக்கே தெரியல, ராஜேந்திர பாலாஜியின் இந்த கலகலப்பான பேச்சால், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.



Comments are closed.

https://newstamil.in/