விக்ரமின் அசத்தலான கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
அஜய் ஞானமுத்து எடுத்து வரும் கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.இந்தப் படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து சில நாட்களுக்கு முன் அவரது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் விக்ரம் விதவிதமான ஏழு தோற்றங்களில் உள்ளார். சவுத் ஆப்ரிக்கன் மற்றும் ஜப்பானியர் போன்ற தோற்றங்கள் அதில் அடங்கும். மேலும், எட்டாவது தோற்றத்திற்கான விக்ரமின் முகம் பகிரப்படவில்லை. சஸ்பென்ஸாக அவர் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்கிறார்.
இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.