கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – விமர்சனம்

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

படத்தின் ஹீரோவாக துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக இருக்கும் இருவரும் ஒரு ஜாலியான


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்
 • Critic's Rating
 • Avg. Users' Rating
3.3

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்

துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன், ரித்து, ரக்‌ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

படத்தின் ஹீரோவாக துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக இருக்கும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

ஆப் டெவலப்பர்ஸாக துல்கர் சல்மான் , ரக்‌ஷன் இணைந்து ஸ்மார்டான ஃபோர்ஜெரி வேலைகளில் ஈடுபடுகின்றனர். இருவரும் தங்களது காதலிகளான ரிது வர்மா, நிரஞ்சனியுடன் குறிப்பிட்ட பணத்துடன் செட்டிலாக விடலாம் என நினைக்க, போலீஸான கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களை துரத்துகிறார். இந்நிலையில் ரக்‌ஷன், துல்கர், நிரஞ்சனி, ரிது என நால்வரும் கோவா செல்கிறார்கள். திடீரென போலிசார் துல்கர் மற்றும் ரக்‌ஷனை சுற்றி வளைக்கிறார்கள். முடிவு என்ன ஆனது என்பதே இந்த படத்தின் கதை.

ஹீரோ துல்கருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மாடர்ன் இளைஞன் கம் ஸ்மார்ட்டான டெக்கியாக சித்தார்த் என்ற வேடத்துக்கு துல்கர் சல்மான். தனது ஷார்ப்பான பார்வையாலேயே தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் அளவுக்கு நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். வழக்கம் போல அவருக்கான சாக்லேட் பாய் கேரக்டர் போல தான் இந்த படத்திலும்.

தொகுப்பாளராக நம் அனைவருக்கும் நன்கு பரிட்சயமானவர் ரக்‌ஷன். முதல் படம் என்று எண்ண முடியாத அளவிற்கு தனது வேடத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது ஒன் லைனர்களால் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றன. இன்னும் நன்றாக ஸ்கோர் பண்ணலாமே ரக்‌ஷன் என சொல்லோ தோன்றுகிறது.

ஒரு போலிஸ் அதிகாரியாக கெளதம் மேனன். ரவுடிகளை மிரட்டி விட்டு வரும் அறிமுக காட்சியிலேயே நான் கிளாஸ் மட்டுமல்ல மாஸ் என்பதை காட்டியிருக்கிறார். சற்று கூடுதலான எதிர்பார்ப்பு. கேமியோ ரோல்களில் படத்தில் வந்து போகும் அவரை முழுமையாக இப்படத்தில் காண்பது ரசிகர்களுக்கு மனநிறைவு.

ஹீரோயின் ரிது வர்மா சில தடுமாற்றங்கள்‌ இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நிறைவாக செய்துள்ளார். இவரின் பின்னணி என்ன என்பது இரண்டாவது பாதியில் தெரிந்த பின் பலருக்கும் ஒரு ஷாக். அவரது தோழியாக நிரஞ்சனா அகத்தியன் நல்ல அறிமுகம்.

குறைவான கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு திரைக்கதையில் ஸ்மார்ட்டான ட்விஸ்ட்டுகள், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நவீன முறையில் நூதன திருட்டுகளை அரங்கேற்றும் நன்கு படித்த அதிமேதாவிகளை அம்பலப்படுத்திய முயற்சி மூலம் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி. ஆங்காங்கே வரும் எதிர்பாராத ட்விஸ்டுகள் படத்தை சுவாரஸியப்படுத்துகின்றன.

ஹரிஷ்வர்தன் ரமேஷ்வர் பின்னணி இசையின்‌ மூலம் காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறார். காட்சிகளை நேர்த்தியாகவும் கலர்ஃபுல்லாகவும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன்.

மொத்தத்தில் காண்பவரை கவரும் இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Sending
User Review
0 (0 votes)
Tag: , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *