தங்கம் விலை சவரன் ரூ.536 சரிவு! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
தங்கம் விலை கடந்த சில தினங்களாக அதிக ஏற்ற – இறக்கத்தில் உள்ளன. இன்றைக்கு சவரன் ரூ.536 சரிந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.67 குறைந்து, ரூ.3,830க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.536 குறைந்து, ரூ.30,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,552 உயர்ந்துள்ள நிலையில் இன்று சவரனுக்கு ரூ.536 குறைந்தது மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது ..இதன்மூலம், தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 31 ஆயிரம் கீழ் வந்தது.
வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 காசுகள் குறைந்து ரூ.51க்கு விற்பனையாகிறது.