பல்லில் பாப்கார்ன் சிக்கி மரணத்தின் விளிம்பு வரை சென்ற இளைஞர்! – அதிர்ச்சி தகவல்!
பற்களுக்கு இடையில் சிக்கிய பாப்கார்னை எடுக்க போய் இறுதியில் அறுவை சிகிச்சை வரை சென்று நபர் ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் பிரிட்டனில் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 41 வயது ஆடம் என்பவர் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது பாப்கான் சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு சில பாப்கார்ன்கள் அவருடைய பல் ஈறில் சிக்கி உள்ளது.
பாப்கார்னை வெளியே எடுக்கும் முயற்சியில் அவர் தனது ஈறுகளை சேதப்படுத்தினார். இதற்கிடையில் விதவிதமான பேனா மூடி, டூத்பிக், கம்பித் துண்டு மற்றும் உலோக ஆணி பொருட்களை கொண்டு எடுக்க முயற்சித்துள்ளார்.
கடுமையான பல்வலி ஏற்பட்டும் அதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இதையடுத்து, ஓரிரு தினங்களில் இரவில் வியர்த்து கொட்டுவது, தலைவலி, கடும் சோர்வு ஏற்ப்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஒருகட்டத்தில் அவருக்கு அதீத மார்பு வலியும் இதயத்தின் தொற்று நோயாக எண்டோகார்டிடிஸ்க்கு வழிவகுத்தது.
வரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய ஈறு சேதமானதால் அதன் விளைவாக இதயத்தில் உள்ள உட்சுவர் தொற்று நோய் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரை குணப்படுத்தினார்.
தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். இனி வாழ்நாளில் பாப்கார்னை சாப்பிடப் போவதில்லை என ஆடம் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.