பாசத்தில் குழந்தையை மிஞ்சிய ஒட்டகம் – வைரலாகும் வீடியோ!

சுசாந்தா நந்தா என்ற இந்திய வனத்துறை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சுவாரசியமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

செல்லப் பிராணிகளின் பாசத்தை வார்த்தைகளால் அளவிடவே முடியாது. அப்படி ஒரு பாசத்தை காட்டிய ஒட்டகத்தின் காட்சி தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தான் வளர்த்த ஒட்டகத்தை விட்டு, வேலைகள் நிமித்தமாக பிரிந்து சென்ற எஜமானர் நீண்ட நாட்கள் கழித்து திரும்பி வந்து தன் ஒட்டகத்தைப் பார்த்துள்ளார்.

அப்போது ஓட்டகமானது சந்தோஷத்தில் கட்டியணைத்து அன்பை பொழிந்துள்ளது. காண்போரை நெகிழ்ச்சியடைய வைக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Comments are closed.

https://newstamil.in/