ஜெயலலிதா போலவே மாறிய கங்கனா! ஆச்சரியத்தில் திரையுலகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, பிப்ரவரி 24-இல் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான ”தலைவி” திரைப்படத்தில் நியூ லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஜெயலலிதா. அரசியலிலும் பெரும் ஆளுமைச் செய்தவர். இறக்கும் முன் கூட இந்தியாவிலேயே மூன்றாம் கட்சியாக உருவெடுத்தது அவரின் முக்கிய சாதனை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனாவின் சகோதரியும், மேலாளருமான ரங்கோலி சந்தெல் இந்த நியூ லுக் போஸ்டரை வெளியிட்டு, ‘அம்மா ஜெயலலிதாவை’ நினைவு கூர்வதாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பின் அரவிந்த் சாமியின் நடன வீடியோவும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது.

தற்போது இளம் வயது ஜெயலலிதா போலிருக்கும் நடிகை கங்கனாவின் புகைப்படம் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.


Comments are closed.

https://newstamil.in/