கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி – வீடியோ
அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச பேட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுழற்றினார். அதிகாரிகளும் அமைச்சர்களும் கிரிக்கெட் விளையாடி அசத்தினர்.
சென்னையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மெரினா கடற்கரை கண்ணகி சிலை எதிரே உள்ள மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.
போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, வெள்ளை தொப்பி அணிந்து கிரிக்கெட் வீரர் போல் வந்திருந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீசினார், அதை லாவலகமாக அடித்து தூக்கினார். அது போல் டிஜிபி திரிபாதியும் பந்துகளை வீசினார். இதைப் பார்த்த அதிகாரிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


இந்த போட்டி குறித்து முதல்வர் எடப்பாடி கூறுகையில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். இதைத் தொடர்ந்து போட்டிகள் தொடர்ந்து நடந்தன.