அண்ணா நினைவு தினம் திமுக அமைதிப் பேரணி
சென்னை : முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் திமுக சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவர் அறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திராவிட அரசியலின் வழியைக்காட்டியாக இவர் பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முதல் அண்ணா சதுக்கம் வரை திமுக.,வின் பேரணியாக சென்றனர்.
இதில் திமுக துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அண்ணாத்துரை நினைவிடத்தில் திமுக.,வினர் அஞ்சலி செலுத்தினர். திமுக.,வினரை தொடர்ந்து அதிமுக.,வினரும் அண்ணாத்துரை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
Comments are closed.