மிரட்டும் கொரோனா – 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – பொது சுகாதாரத்துறை தகவல்

கொரோனா பீதி பரவியதை தொடர்ந்து அரசு விதித்த கடும் கட்டப்பாடுகளால் தமிழகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 861 பயணிகளை சோதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் – நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

வெளிநாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகுதான் வெளியே அனுமதிக்கின்றனர். கொரோனா தொற்று ஏதேனும் தென்பட்டால் அவர்களை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி ரத்த மாதிரிகளை எடுத்து கண்காணித்து வருகின்றனர்.

இத்தாலியில் 2,503 பேரை பலி வாங்கியது கொரோனா

இதனைத் தொடர்ந்து, 2635 பேர் வீடுகளில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், அதிகபட்சமாக சென்னையில் 934 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 4 பேரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெரிய வணிக வளாகங்களை மூட உத்தரவு

கொரோனா பாதிப்புகள் குறித்து இன்றுவரை, 140 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக நபர்களிடமிருந்து எடுக்கப்பட்டு. கடந்த வாரம் நேர்மறையை சோதித்த ஒருவருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள மாதிரிகள் COVID-19 க்கு எதிர்மறையாக திரும்பின. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு நோய் குணமடைந்த நிலையில், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


3 thoughts on “மிரட்டும் கொரோனா – 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – பொது சுகாதாரத்துறை தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/