ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்
மூன்று முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் தனது 95 வயதில் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநர் அபிஜித் சிங் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 12, 1948 அன்று, கிரேட் பிரிட்டனை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சுதந்திர நாடாக முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றது. இந்த புகைப்படத்தில் பல்பீர் சிங். இந்திய உயர் ஸ்தானிகர் வி.கே.கிருஷ்ண மேனனிடமிருந்து வாழ்த்துச் செய்திகளைப் பெறுவதைக் காணலாம்.