சோமாலியாவில் அவசர நிலை – 20,000 கோடி வெட்டுக்கிளிகள்! – வீடியோ

சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ என்ற தமிழ் திரைப்படத்தில், விவசாயத்தை அழிக்க, ஒரு நிறுவனம் வெட்டுக்கிளிகளை ஏவி விடும். இதை உதாரணமாகக் காட்டி, ‘பாகிஸ்தான் தான் குஜராத்திற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பியுள்ளது’ என, சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கென்யாவில் மட்டும் சுமார் 200 பில்லியன் வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 2019-ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் முன்பில்லாத அளவுக்கு பெய்த கனமழையே வெட்டுக்கிளியின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

எத்தியோப்பியா, சோமாலியாவில் மழை வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு வெட்டுக் கிளிகள் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கென்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெட்டுக் கிளிகளை மருந்து தெளித்து அளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 71 கோடியே 32 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

ஏப்ரல் மாதம் சோமாலியாவின் ஜூபா நதியின் படுகையில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. இந்நிலையில், விவசாயப் பயிர்களை லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. இதைத் தேசிய அவசர நிலையாக சோமாலிய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.

வருகிற மார்ச் மாதத்தில் கென்யாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கும் போது வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் ஒரு புதிய தலைவலியாக இருக்கும் என்பதால்.

போர்க்கால அடிப்படையில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளனர். ஓரிரு வாரத்திற்குள் இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே, அந்நாட்டு விவசாயிகளைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியும்.



Comments are closed.

https://newstamil.in/