Monday, September 14, 2026
Latest

பாக்சிங்கில் அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்!

மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

மேலும் ஜெயக்குமார், கைகளில் கிளவ்ஸ்களை கட்டிக் கொண்டு பாக்சிங்கில் ஈடுபட்டார்.

பின்னர் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற ஒருசில முறைகேட்டை வைத்து, அனைத்து தேர்வுகளையும் சந்தேகப்படக் கூடாது என்றார்.