‘தலைவி’ எம்.ஜி.ஆர். லுக்கில் அரவிந்த் சாமி!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் விஜய் இயக்கம் தலைவி படம் மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்தது. படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றத்துடன் காட்சியளிக்கும் முதல்பார்வை புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரவிந்த்சாமி தெரிவிக்கையில் முதல்பார்வை எம்.ஜி,ஆர் பிறந்த தினமான இன்று வெளியானது போல் டீசரும் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்து உள்ளார்.