ஜார்கண்டில் பாஜகவை ஓரங்கட்டி; ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?

வெளியிடப்பட்ட ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களை கைப்பற்றி, காங்., கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்ட்டிலும் பா.ஜ., ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போது காங்கிரஸ்- ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது

பா.ஜ., 28 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருவதால் தனித்து போட்டியிட்ட ஏஜெஎஸ்யு, ஜெவிஎம் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்து, தொங்கு சட்டசபை அமைக்க பா.ஜ., திட்டமிட்டு வருகிறது. இதற்காக இரு கட்சிகளுடனும் பா.ஜ., தலைமை பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் பல சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/