டகால்டி விமர்சனம்
டகால்டி விமர்சனம்
Overall
- Critic's Rating
- Avg. Users' Rating
User Review
( vote)விமர்சனம்
சந்தானம், யோகி பாபு ஆகியோர் கூட்டணியின் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ள திரைப்படம் டகால்டி. சந்தானம் காமெடியனாக கொடிக்கட்டி பறந்தாலும் ஒரு ஹீரோவாக ஜெயிக்க போராடி வந்தார். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
சாம்ராட் (தருண் அரோரா) மிகப் பெரிய பணக்காரன். தன் கம்ப்யூட்டரில் ஒரு பெண்ணின் படத்தை வரைந்தால், அதே போன்ற பெண்ணைத் தேடிப் பிடித்துவந்து ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் விபரீதமான பழக்கம் அவருக்கு இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் கதாநாயகியின் (ரித்திகா சென்) படத்தை வரைந்து, அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொல்கிறார்.
சந்தானம் மும்பையில் டகால்டி வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வருகின்றார். அந்த சமயத்தில் மும்பையில் டான்-ஆக இருக்கும் ராதாரவியிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொள்ள ராதாரவி உத்தரவிடுகின்றார்.
சந்தானம் உடனே அந்த வீட்டில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு வாரத்தில் ஒப்படைக்கிறேஎன் என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகி, அந்த பெண்ணை எப்படியோ கண்டுப்பிடிக்கின்றார்.
அந்தப் பெண் திருச்செந்தூரில் இருப்பது தெரியவர, அங்கே போய் ஏமாற்றி அவளைக் கூட்டிவந்து, சாம்ராட்டிடம் ஒப்படைக்கிறான். அதில் கிடைத்த பணத்தில் ரூம் போட்டு, குடித்த பிறகு, மனம் திருந்தி அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறான் குரு. இதில் யோகிபாபுவின் ரோல் என்ன என்பது சொல்லாமலேயே விளங்கியிருக்கும்.
பிறகு அந்த பெண்ணை சொன்னது போல் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
சந்தானம் எப்போதும் ஒன் லைன் கவுண்டரில் கிங் தான், அந்த விதத்தில் இந்த படத்திலும் தூள் கிளப்புகின்றார், அதிலும் கூடுதல் போனஸாக யோகிபாபுவும் களத்தில் இறங்க படம் அரை மணி நேரம் செம்ம கலகலப்பாக செல்கின்றது.
ரித்திகா சென் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல அழகாக நடித்து கொடுத்துள்ளார். ராதா ரவி, சாம்ராட் மற்ற நடிகர் நடிகைகள் அவர்களின் வேலைகளை கச்சிதமாக செய்துள்ளனர்.
இயக்குனர் விஜய் ஆனந்த் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளார். அதை சிறப்பாகவும் செய்து முடித்துள்ளார். இரண்டாம் பாதியில் யோகி பாபுவை மிஸ் செய்தது தான் ஒரு குறை.
சந்தானம் முடிந்த அளவிற்கு படத்தை தாங்கி கொண்டு செல்கின்றார், அவருக்கு மிக பக்கபலமாக யோகிபாபு கலக்கியுள்ளார். நல்ல கதை இருந்தும், தடுமாறும் திரைக்கதை, குறிப்பாக இரண்டாம் பாதி. படத்தின் காமெடி படத்தை ஓரளவிற்கு நகர்த்துகிறது.
மொத்தத்தில் டகால்டி கொஞ்சம் ஏமாற்றம்