கவின் 2019 ஆம் ஆண்டின் ‘மோஸ்ட் டிசைரபில் மேன்’ – வீடியோ

பிரபல செய்தித்தாள் நிறுவனமான சென்னை டைம்ஸ் ஆண்டு தோறும் “மோஸ்ட் டிசைரபில் மேன்” என்ற பட்டத்தை மக்களின் தேர்தல் மூலமாக அளித்து வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டிற்கான மக்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் பிக் பாஸ் 3 பிரபலம் கவின். இது குறித்து கவினிடம் தெரிவித்தபோது விளையாடாதீங்க என்றார்.

பின்னர், என்னோட காலரை தூக்கிவிட்டுட்டு நான் வீட்ல சென்னை டைம்ஸ் பேப்பரோட நடக்கப் போறேன் என்று தெரிவித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி ஆகிய நாடகங்களில் நடித்தவர் நடிகர் கவின்.

இவர் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுப்பாளராக நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார், ஆரம்பத்தில் சாக்ஷி அகர்வால், லொஸ்லியா ஆகியோருடன் காதல் மயக்கத்தில் இருந்திருந்தாலும், நிகழ்ச்சியின் இறுதியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

என்னதான் அந்த நிகழ்ச்சியில் முகின் பட்டத்தை வென்றாலும் கவின் தமிழ் நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டார்.


9 thoughts on “கவின் 2019 ஆம் ஆண்டின் ‘மோஸ்ட் டிசைரபில் மேன்’ – வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/