தர்பார் படம் 30 கோடி நஷ்டம்? 150 கோடி பொய்யா? உண்மை என்ன?

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘தர்பார்‘. தர்பார் படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி விநியோகஸ்தர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

படத்தின் தமிழ்நாடு ஏரியாக்களின் வினியோக உரிமையில் திருச்சி ஏரியாவிற்கு படத்தை வாங்கிய ஒருவருக்கு மட்டும்தான் நஷ்டம் வந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவரும் அந்த நஷ்டத் தொகையைக் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

படம் ரிலீஸான நான்கு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன் அறிவித்தது. இந்நிலையில் படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 8 மாவட்டங்களை சேர்ந்த விநியோகஸ்தர்கள் ரஜினிகாந்த்தை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

மற்ற ஏரியாக்களில் படத்தை வாங்கியவர்களுக்கு நிச்சயம் குறைந்தபட்ச லாபமாவது கிடைத்திருக்கும் என்கிறார்கள். அப்படியிருக்க இப்போது திடீரென நஷ்டம் என சிலர் கிளம்பி வருவதற்கு அரசியல் பின்னணி காரணம் என்கிறார்கள்.

ரஜினிகாந்த்தின் சமீபத்திய பேச்சுக்களை பயன்படுத்திக் கொண்டு அவருடைய அரசியல் நுழைவுக்கான முதல் எதிர்ப்பை ‘தர்பார்’ படம் நஷ்டம் என்று சொல்லி ஆரம்பித்துள்ளதாகத் தகவல்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விநியோகஸ்தர்களை இன்று சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தர்பார் படத்தால் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இது போகும் பாதையை வைத்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.



Comments are closed.

https://newstamil.in/