தர்பார் படத்தை வெளியிட தடை கோர்ட் உத்தரவு
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தை மலேசியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “தர்பார்” திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “தர்பார்” படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2.O பட விநியோகத்தின் போது பெற்ற பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய் கிரியோஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ரூ.4 கோடியே 90 ஆயிரத்தை டெபாசிட் செய்யும் வரை ‘தர்பார்’ படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ‘தர்பார்’ படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி உள்ளது.