கச்சா எண்ணெய் விலை உயர்வு; பெட்ரோல் 80 ரூபாயை தொட வாய்ப்பு!

அமெரிக்கா – ஈரான் இடையே நடந்து வரும் சன்டை மற்றும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 3.5% , அதாவது ஒரு பீப்பாய் 71 டாலராக உயர்ந்துள்ளது.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்ததையடுத்து அமெரிக்கா, ஈரானுக்கு இடையே மோதல் இருந்து வந்தது.

ராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குவாசிம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளிடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அதிகரித்து 71 டாலராக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் உயரும் என கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை திடீரென 4.4 சதவீதம் அதிகரித்தது 69.16 டாலராக உயர்ந்தது. தற்போது மீண்டும் 4 சதவிகிதம் எண்ணெய் விலை கூடியுள்ளது.

இதனால் இந்தியாவில் தற்போது பெட்ரோல் ரூ.78.69-க்கும், டீசல் ரூ.72.69-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது 80 ரூபாயை தொட வாய்ப்புள்ளது .

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால், கச்சா எண்ணெய் விலை உயர்வை உலக நாடுகள் அனுமதிக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/