கவின் – லாஸ்லியா காதல் முறிவு? உறுதியானது!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதனால் ரசிகர்கள் கவிலியா – கவின்லாஸ்லியா போன்ற பக்கங்களை கவிலியா ஆரம்பித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னராவது இவர்கள் இருவரும் காதல் குறித்து மனம் திறப்பார்கள் என்று எதிர் பார்த்தனர். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவரின் எங்கும் வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர்.

ஆனால், இவர்களது ரசிகர்கள் இன்னமும் இவர்கள் காதலித்து வருவதாக தான் நினைத்து வருகின்றனர். ஆனால் இவர்களுடைய ஆர்மியை சேர்ந்தவர்களோ, விடா பிடியாக, ‘கவிலியா’ என்கிற பெயரில் இருவரும் இணைந்திருப்பது போல பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், கவின் போலவே போஸ் கொடுத்து அவரை விமர்சிக்கும் தொனியில் இவர் போட்ட பதிவு கவின் – லாஸ்லியா ஆர்மி மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கவின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி முன் நின்றபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து பதிவிட்டு, எப்பயாவது உதவும்” என்று பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து லாஸ்லியா, இதே போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, “வாழ்க்கை உங்களுக்கு எதாவது கற்பிக்க நினைக்கிறது. அதனால் உங்களை கண்ணாடியில் பார்த்து அதை சரி செய்துக் கொள்ள முயற்சியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார், தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் லாஸ்லியா.

அதில் “அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், முதலில் இது எனது இன்ஸ்டாகிராம், இதுல நான் போடுற தலைப்புகள் அல்லது புகைப்படங்கள் நான் என்னை பத்தினது “என்னைப் பற்றி மட்டுமே”. என்பதை புரிந்து கொள்ளுங்கள். “


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *