ஓடும் மின்சார ரயிலில் வாசலில் தொங்கியபடி சாகசம் செய்த 20 வயது இளைஞர், எதிரே இருந்த கம்பம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
ரயிலில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதும் விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. எவ்வளவு தான் ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டாலும் கல்லூரி மாணவர்கள் திருந்தியபாடியில்லை.
இந்நிலையில், அக்காவின் திருமணத்திற்கு துணி எடுக்கப்போன 20 வயது இளைஞர், ஓடும் மின்சார ரயிலில் வாசலில் தொங்கியபடி அவர் சாகசம் செய்ய அதை ரயிலின் உள்ளே இருந்த அவனது நண்பன் வீடியோவாக பதிவு செய்துள்ளான்.
அப்போது, எதிரே இருந்த கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில், இளைஞர் தில்ஷாத் அப்படியே ரயிலின் மீது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், ரயிலில் ஸ்டண்ட் செய்ய வேண்டாம், அது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது என்ற குறிப்புடன் இந்த வீடியோவை, ரயில்வே அமைச்சகம் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.