சாப்பிடும் போது தொண்டையில் போண்டா சிக்கி பெண் உயிரிழப்பு!
போண்டா சாப்பிடும் போது தொண்டையில் போண்டா சிக்கி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் கடை ஒன்றில் போண்டா வாங்கி சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கியதால் பத்மாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். சாப்பிட்ட போண்டா தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பெண் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன். ராயப்பேட்டையில் உள்ள டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி(45). இவர் தன் கணவருடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு
திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது, இதுவரை குழந்தை இல்லை.
நேற்று பத்மாவதியும் அவரது தாயாரும் போண்டா வாங்கி வந்துள்ளனர். அப்போது பத்மாவதி சாப்பிடும்போது தொண்டையில் போண்டா அடைத்துள்ளது. இதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.