13 திமுகவுக்கு; 12 அதிமுகவுக்கு சேர்மன் பதவிகளை காப்பாற்றுகின்றன!

நடைபெற்ற 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை நடைபெற்று வருகிறது, மேலும் அமைச்சருக்கு நிகரான சேர்மன் பதவிகள் 13 திமுகவுக்கு, 12 அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

அதிமுக மாவட்ட கவுன்சிலர் 215 ஒன்றிய கவுன்சிலர் 1794 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாமக 13 மாவட்ட கவுன்சிலர் 113 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்துள்ளது. தேமுதிக 5 மாவட்ட கவுன்சிலர், 87 ஒன்றிய கவுன்சிலர், பாஜக 6 மாவட்ட கவுன்சிலர் 87 ஒன்றிய கவுன்சிலர்.

திமுக 242 மாவட்ட கவுன்சிலர், 2096 ஒன்றிய கவுன்சிலர், காங்கிரஸ் 10 மாவட்ட கவுன்சிலர் 116 ஒன்றிய கவுன்சிலர், மதிமுக 2 மாவட்ட கவுன்சிலர், 16 ஒன்றிய கவுன்சிலர், விசிக 6 ஒன்றிய கவுன்சிலர், இந்திய கம்யூனிஸ்டு 6 மாவட்ட கவுன்சிலர், 70 ஒன்றிய கவுன்சிலர், மா.கம்யூனிஸ்டு 2 மாவட்ட கவுன்சிலர் 18 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்துள்ளன.

அதேபோல அமமுக அமமுக ஒரு மாவட்ட கவுன்சிலர், 93 ஒன்றிய கவுன்சிலர் சுயேட்சை 1 மாவட்ட கவுன்சிலர் 436 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பிடித்துள்ளன. மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சிவகங்கை , ராமநாதபுரம், திருச்சி14 மாவட்டங்களில் திமுக கைப்பற்றுகிறது.

கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல் தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை அதிமுக கைப்பற்றுகிறது.

இதன் மூலம் அமைச்சருக்கு நிகரான சேர்மன் பதவிகள் 13 திமுகவுக்கு; 12 அதிமுகவுக்கு வாய்ப்புகள் உள்ளது.


138 thoughts on “13 திமுகவுக்கு; 12 அதிமுகவுக்கு சேர்மன் பதவிகளை காப்பாற்றுகின்றன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/