மனைவி தற்கொலை; சோகத்தில் 2 குழந்தைகளுடன் கணவன் தற்கொலை
ராணிப்பேட்டை அருகே 2 குழந்தைகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் பிப்ரவரி 2 ந்தேதி காலை வெங்கடேசனின் மனைவி நிர்மலா, குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் இருந்து வந்த கணவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.