மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு புகார், கோலிவுட்டில் பரபரப்பு

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை. வடிவேலு கடந்த சில வருடங்களகவே சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் நடந்து வந்தது. இதை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி, பேசி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்தார்.

அதில் வடிவேலு பற்றி சிங்கமுத்து பல தகவல்களை கூறினார், அதில் வடிவேலுவை நான் தான் ஆளாக்கிவிட்டேன். அவருக்கு ஒன்னுமே தெரியாது, நான் தான் இடமெல்லாம் வாங்கி கொடுத்து பெரியாள் ஆக்கினேன் என்று பேசியுள்ளார்.

இதற்காக தான் பெயரை தேவையில்லாமல் இழுத்து கெடுக்கும் வகையில் பேசியுள்ளனர் என்று சிங்கமுத்து, மனோபாலா மீது வடிவேலு புகார் கொடுத்துள்ளார்.

அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்.

நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST FEATURES:

Tag: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *