குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கிய நிக்கி கல்ராணி தங்கை!

குடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கியதாக நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணியிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘மொட்டசிவா கெட்டசிவா’, ‘சார்லி சாப்ளின் 2’ போன்ற படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவர் முதலில் மலையாளம் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவருடைய தங்கை சஞ்சனா கல்ராணி இவர் தற்போதுதான் கன்னட சினிமாத்துறையில் பிரபலமாகி வருகிறார். இவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இரவு நேர பார்ட்டி ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையாகிய சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமா தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தயாரிப்பாளருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோப்பான் பார்க் போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் செய்திருக்கிறார். சஞ்சனா கல்ராணி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மோதல் கன்னட திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சஞ்சனா கல்ராணி தரப்பில் கூறும்போது, தயாரிப்பாளருடன் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால் அவர்கள் அடித்துக் கொள்ளவில்லை என்கின்றனர்.


129 thoughts on “குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கிய நிக்கி கல்ராணி தங்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/