லாஸ்லியா ஒரே சமயத்தில் இரண்டு படங்கள்

பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் கிடைத்தனர். லாஸ்லியா எப்போது சினிமாவில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியுள்ளது.

பிக்பாஸ் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் நடிகர் ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் பூஜை நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் ஃபிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/