தங்கம் விலை சவரன் ரூ. 424 சரிவு
ஈரான் – அமெரிக்கா போர்ப்பதற்றம் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன. இதனால், தங்கம் விலை நேற்று வரலாறு காணாத உச்சமாக, சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று (ஜன., 7) சவரன் ரூ.424 குறைந்து, 31 ஆயிரத்திற்கு கீழ் சென்றது
சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் ஒருகிராம் விலை ரூ.3,843க்கும், கிராமுக்கு ரூ.53யும், சவரன் ரூ.424யும் சரிந்து ரூ.30,744க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.40,380க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.51.00க்கு விற்பனையாகிறது.